குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை வெளியீடு - டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தேர்வாணயம் வெளியிட்டுள்ளது.

Update: 2022-02-23 07:52 GMT
சென்னை,

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் அலுவலர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் போட்டி தேர்வுகள் மற்றும் நேர்காணல் தேர்வுகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. 

இந்நிலையில் குரூப் 2 பணிக்கு 116 பணியிடங்களுக்கும்  மற்றும் குரூப் 2ஏ பணிக்கு 5412 பணியிடக்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வாணயம் சார்பில் கடந்த 18ம் தேதி தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கான அறிவிப்பாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் குரூப் 2 பிரிவில் இந்த முறை காவல்துறை பிரிவின் கீழ் சிறப்பு பிரிவு அதிகாரிக்கான பதவி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக தேர்வு நடத்தாததால் இந்த முறை வயது வரம்பை 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 23-02-2022 முதல் 23-03-2022 வரை www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் இதற்கான முதல் நிலை தேர்வு மே 21 தேதி நடத்தப்படும் என தேர்வாணயம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்