குலுக்கல் முறையில் வெற்றி பெற்ற பா.ஜனதா வேட்பாளர்
பணகுடி பேரூராட்சி 4-வது வார்டில் குலுக்கல் முறையில் பா.ஜனதா வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சி 4-வது வார்டில் போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் மனுவேல், அ.தி.மு.க. வேட்பாளர் உஷா ஆகிய 2 பேரும் தலா 266 வாக்குகள் பெற்று முதலிடத்தில் சமநிலையில் இருந்தனர்.
எனவே, வெற்றியை தீர்மானிப்பதற்காக, தேர்தல் நடத்தும் அலுவலர் பா.ஜனதா, அ.தி.மு.க. வேட்பாளர்களின் பெயர்களை பேப்பரில் எழுதி சுருட்டி, அவற்றை டிபன் பாக்சில் போட்டு குலுக்கி, அவற்றில் ஒன்றை தேர்வு செய்தார். இதில் பா.ஜனதா வேட்பாளர் மனுவேலின் பெயர் வந்ததால், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி் 4-வது வார்டில் 4 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த வார்டில் வாக்கு எண்ணிக்கை முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் செல்வி, சுயேச்சை வேட்பாளர் சமயராணி ஆகியோர் தலா 186 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். எனவே 2 வேட்பாளர்களின் பெயர்களையும் எழுதி குலுக்கல் முறையில் சீட்டு எடுக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் செல்வி வெற்றி பெற்றார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சி 1-வது வார்டு வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட போது ஷீலா ஜெயந்தி (தி.மு.க.) 97 வாக்குகளும், சஜினா (சுயேச்சை) 97 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து குலுக்கல் முறையில் சீட்டு எடுக்கப்பட்டது. இதில் தி.மு.க. வேட்பாளர் ஷீலா ஜெயந்தி தேர்வு செய்யப்பட்டார்.
இதேபோல திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டி பேரூராட்சி 12-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் சலீமா மற்றும் சுயேச்சை வேட்பாளர் சர்மிளா பானு தலா 179 வாக்குகள் பெற்ற நிலையில், குலுக்கல் முறையில் தி.மு.க. வேட்பாளர் சலீமா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். திருச்சி மாவட்டம் தா.பேட்டை பேரூராட்சி 6-வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சத்யா, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி 13-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் சினோகா அரிகரன், ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் பேரூராட்சி 10-வது வார்டு வேட்பாளர் கார்த்திகேயன் ஆகியோரும் குலுக்கல் முறையில் தேர்வானார்கள்.