நாகர்கோவில் மாநகராட்சியில் 21 வயது இளம்பெண் வெற்றி...!
நாகர்கோவில் மாநகராட்சியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 21 வயது இளம்பெண் கவுசி வெற்றிபெற்றுள்ளார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் 100 ஆண்டுகளாக நகராட்சியாக இருந்து வந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே பாரம்பரியமும், வரலாற்று சிறப்புகளையும் கொண்டதாக நாகர்கோவில் மாநகராட்சி விளங்குகிறது.
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு முதல் முறையாக மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடந்தது. இதில் மொத்தம் 52 வார்டுகளில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 399 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வார்டுகளுக்கு 356 வேட்பாளர்கள் போட்டியிட்டியிட்ட நிலையில் 60.94 சதவீத வாக்குகள் பதிவானது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நாகர்கோவில் நகராட்சி 17 வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 21 வயதான இளம்பெண் கவுசி வெற்றிப்பெற்றுள்ளார்.