திருநெல்வேலி மாநகராட்சியில் தி.மு.க. 16 வார்டுகளில் வெற்றி
திருநெல்வேலி மொத்தமுள்ள 55 வார்டுகளில் இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 20 வார்டுகளில் திமுக 16 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.
சென்னை
ராமநாதபுரம் நகராட்சியை திமுக கைப்பற்றியது மொத்தம் உள்ள 33 வார்டுகளில் திமுக 23 இடங்களில் வெற்றி. காங்கிரஸ் 3, மமக 1, பாஜக 1, அ.ம.மு.க. 1, அ.தி.மு.க. 2, சுயேட்சை 2 வார்டுகளில் வென்றுள்ளனர்.
தஞ்சை மதுக்கூர் பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியுள்ளது. சேலம் வீரகல்புதூர் பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
புதுக்கோட்டை : 15 வார்டுகளை கொண்ட அன்னவாசல் பேரூராட்சியில் 8 வார்டுகளில் அதிமுக வெற்றி ; 6 வார்டுகளில் திமுக வெற்றி.
மணப்பாறை நகராட்சியின் 27 வார்டுகளில் திமுக கூட்டணி 11 இடங்களிலும், அதிமுக 11 இடங்களிலும் வெற்றி மணப்பாறை நகராட்சி யாருக்கு? என்பதை தீர்மானிக்கும் சுயேட்சைகள் 5 இடங்களில் வெற்றி
திருநெல்வேலி மொத்தமுள்ள 55 வார்டுகளில் இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 20 வார்டுகளில் திமுக 16 இடங்களிலும், மதிமுக ஒரு இடத்திலும், அதிமுக 2 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் பெரும்பாலான வார்டுகளில் திமுக முன்னணியில் இருப்பதால், திருநெல்வேலி மாநகராட்சி திமுக வசமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல் மாநகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றுகிறது
மொத்தம் உள்ள 48 வார்டுகளில் திமுக 24 இடங்களில் வெற்றி
அதிமுகவை விட திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று வருவதால், மாநகராட்சியை கைப்பற்றுகிறது
ஆரணி நகராட்சியை கைப்பற்றுகிறது திமுக கூட்டணி!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டில் - திமுக 12, அதிமுக 15, மதிமுக 2, காங்கிரஸ் 2, விசிக 1, சுயேட்சை 1 என வெற்றி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 20 வது வார்டில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் ராஜசேகரன் வெற்றி.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, ராமேஸ்வரம் ஆகிய 4 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றுகிறது
விழுப்புரம் கோட்டக்குப்பம் நகராட்சி 21வது வார்டில் வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த வேட்பாளர் சைத்தனி முகமது கவுஸ்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சியில் 8 வார்டுகளில் அதிமுகவும், 6ல் திமுகவும் , சுயேட்சை 1 வார்டிலும் வெற்றி.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் - சிபிஎம் 5, திமுக 5, காங்கிரஸ் 4, பாஜக 5, பாமக 1, சுயேட்சை 1 என வெற்றி