நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: 21 மாநகராட்சிகளில் 18 இடங்களில் முந்துகிறது திமுக...!
கோவை சமத்தூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தமுள்ள 12 வார்டுகளில் 8ல் திமுகவும், 4ல் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை,
தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் இதுவரையிலான முடிவுகளின்படி, மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் திமுக 18 இடங்களில் முந்துகிறது. அதிமுக 01
மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் திமுக 98 இடங்களிலும், அதிமுக 06 இடங்களிலும், பாமக 2 இடத்திலும் முந்துகின்றன. மற்றவை -04
மொத்தமுள்ள 489 பேரூராட்சிகளில் திமுக 209 இடங்களிலும், அதிமுக 17 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும், அமமுக 3 இடங்களிலும், நாம் தமிழர் கட்சி 1 இடத்திலும் முந்துகின்றன.