ஜெயலலிதா செல்வ வரி பாக்கி வழக்கு: ஜெ.தீபா, ஜெ.தீபக் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

ஜெயலலிதா செல்வ வரி பாக்கி வழக்கு: ஜெ.தீபா, ஜெ.தீபக் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2022-02-21 23:01 GMT
சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2008-09-ம் ஆண்டுக்கான செல்வ வரியை செலுத்தவில்லை என்று அவருக்கு எதிராக வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து ஜெயலலிதா தொடர்ந்த வழக்கை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், அவரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கில், ஜெயலலிதாவிற்கு பதில் அவரது சட்டப்படியான வாரிசுகள் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோரை சேர்க்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வருமான வரித்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை வருமான வரித்துறை, ஜெயலலிதா இறந்து சுமார் 1,105 நாட்கள் காலதாமதத்துடன் தாக்கல் செய்துள்ளது. இதற்கு பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்று தீபக் சார்பில் ஆஜரான வக்கீல் எஸ்.எல்.சுதர்சன் கோரிக்கை விடுத்தார். இதேபோல, தீபா தரப்பிலும் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்