தேனி: வேன் - கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் 3 பேர் பலி

தேனி மாவட்டத்தில் வேன் - கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-02-21 16:04 GMT
ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கணவாய் பகுதியில் இன்று மாலை வேன் மற்றும் 2 கார்கள் நேருக்கு நேர் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதியை சேர்ந்த 3 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பெண்கள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்