விக்கிரவாண்டி அருகே காணாமல் போன காவலர் சடலமாக மீட்பு

விக்கிரவாண்டி அருகே காணாமல் போன காவலர் சடலமாக மீட்கப்பட்டார்.

Update: 2022-02-20 13:26 GMT
விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அடுத்த திண்டிவனம் வட்டம் ஏழாம் கிராமத்தைச் சேர்ந்தவர்  வேல்முருகன் (42), இவர் மயிலம் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். கொரானா பாதிப்பு ஏற்பட்டு கடந்த ஜனவரி மாதம் 21 ம் தேதி முதல் மருத்துவ விடுப்பில் வீட்டில் இருந்தார். கடந்த 18 ம்தேதி மாலை 5.00மணிக்கு  வேல்முருகன் தனது மோட்டார் சைக்கிளில் விக்கிரவாண்டி சென்று வருவதாக தனது மனைவி தமிழரசியிடம் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதுபற்றி மனைவி தமிழரசி விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்த நிலையில் போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் விக்கிரவாண்டியில் இருந்து குத்தாம்பூண்டி செல்லும் ரோட்டில் பயன்படுத்தாத நிலையில் உள்ள மார்டன் ரைஸ் மில் தோட்டப் பகுதியில் வேல்முருகன் விஷம் குடித்து இறந்து கிடந்துள்ளார்.

அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் போலீசாருக்கு தகவல்  தெரிவித்ததன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேல்முருகன் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்