ஓசூரில் கள்ள ஓட்டு போட்ட பெண் பிடிபட்டார்..!

ஓசூரில் போலி வாக்காளர் அட்டையை பயன்படுத்தி கள்ள ஓட்டு போட்ட பெண்ணிடம் போலீசாரிடம் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-02-19 14:59 GMT
ஓசூர்,

ஓசூர் மாநகராட்சி தேர்தலையொட்டி, சீதாராம் மேடு அருகேயுள்ள, அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளி அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மாலை விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, கள்ள ஓட்டுபோட்டதாக பெண் ஒருவரை, 27-வது வார்டு தி.மு.க வேட்பாளர் மாணிக்கவாசகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அதிகாரிகளிடம் பிடித்துக்கொடுத்தனர். 

விசாரணையில், அந்த பெண், ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த வேலு என்பவரது மனைவி புஷ்பா (48) என்பதும், ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆயாவாக பணி செய்து வருவதும் தெரியவந்தது. அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் வாக்காளர் அட்டையை போலியாக பயன்படுத்தியதும் தெரியவந்தது.அந்த பெண்ணின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் தி.மு.க.வினர் வலியுறுத்தினார்கள்.

மேலும் செய்திகள்