நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : வாக்குப்பதிவு நிறைவு

நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

Update: 2022-02-19 11:50 GMT

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான  வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.இதற்காக மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டன.

 சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளை பொறுத்தமட்டில் 1,400 ஓட்டுகளுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையிலும், இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளை பொறுத்தமட்டில் 1200 ஓட்டுகளுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையிலும் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டன.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய முதலே  மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். 

பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது .

இந்நிலையில் தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.

5 மணிக்கு முன் வந்த  வாக்காளர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

கொரோனா தொற்று பதித்தவர்கள்  மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. 


மேலும் செய்திகள்