நகரப்புற உள்ளாட்சி தேர்தல்: காலை 11 மணி நிலவரம் வெளியீடு
நகரப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 11 மணி வரை பதிவான வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
சென்னை,
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என மொத்தம் 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 11 மணி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, காலை 11 மணி நிலவரப்படி 21.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அரியலூர் 30.79 சதவீதம், செங்கல்பட்டு 10.65 சதவீதம், சென்னை 17.88 சதவீதம், கோவை 21.04 சதவீதம், கடலூர் 25.40 சதவீதம், தர்மபுரி 26.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
திண்டுக்கல் 28.53 சதவீதம், ஈரோடு 21.64 சதவீதம், கள்ளக்குறிச்சி 28.97 சதவீதம், காஞ்சிபுரம் 26.56 சதவீதம், கன்னியாகுமரி 22.86 சதவீதம், கரூர் 29.23 சதவீதம், கிருஷ்ணகிரி 23.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மதுரை 17.91 சதவீதம், மயிலாடுதுறை 21.93 சதவீதம், நாகை 23.52 சதவீதம், நாமக்கல் 30.52 சதவீதம், பெரம்பலூர் 25.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
முன்னதாக காலை 9 மணிக்கு 8.21 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.