நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; பொறியியல் தேர்வு தேதிகள் மாற்றம்

வாக்கு எண்ணிக்கை நாட்களில் நடைபெற இருந்த பொறியியல் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.

Update: 2022-02-18 22:15 GMT
சென்னை,

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான நவம்பர், டிசம்பர் பருவ தேர்வுகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

இதற்கிடையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு சில பொறியியல் கல்லூரிகளில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் தேர்வு எழுதும் இளநிலை மற்றும் அரியர் மாணவர்களுக்கும், தொலைதூரக்கல்வியில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கும் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதனபடி இளநிலை மற்றும் அரியர் மாணவர்களுக்கு பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு மார்ச் 2 ஆம் தேதிக்கும், பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு மார்ச் 3 ஆம் தேதிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொலைதூரக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு மார்ச் 9 ஆம் தேதிக்கும், பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு மார்ச் 10 ஆம் தேதிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்