3 வயது சிறுமி உயிருடன் எரித்து கொலை..!

கோவை அருகே 3 வயது சிறுமியை உயிருடன் எரித்து கொலை செய்த வாலிபருக்கும் தீக்காயம் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-02-18 20:33 GMT
கோவை,

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை அருகே நடுஅரசூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (34). இவரது மனைவி ரம்யா (32). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று 9 வயது மூத்த மகள் பள்ளிக்கு சென்று விட்டார். 3 வயது சிறுமி தேஜா ஸ்ரீ மற்றும் அவருடன் தந்தை ராஜேஷ் ஆகியோர் வீட்டில் இருந்து உள்ளனர்.

அப்போது அப்போது வீட்டிற்கு ராஜேசின் நண்பரான மேற்கு அரசூர் பகுதியை சேர்ந்த தனசேகர் (30) வீட்டிற்கு வந்து உள்ளார். அவர்கள் இருவரும் சிறிது நேரம் அமர்ந்து பேசியுள்ளனர். பின்னர் ராஜேஷ் சாப்பிடுவதற்கு நொறுக்கு தீனி வாங்குவதற்காக அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது வீட்டு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

அப்போது வீட்டில் இருந்து கருகிய வாடை வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு அவரது 3 வயது மகள் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அருகில் அவரது நண்பர் தனசேகர் பாதி தீக்காயங்களுடன் கிடந்தார். இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீக்காயம் அடைந்த தனசேகர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் விசாரணையில் தனசேகர், 3 வயது சிறுமியின் மீது துணிகளை போட்டு, வீட்டில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு எரித்து கொன்றது தெரியவந்தது. அப்போது கியாஸ் திலிண்டர் தீ அவர் மீதும் பற்றியதால் அவருக்கும் 60 சதவீத அளவிற்கு தீக்காயம் ஏற்பட்டது. 

இதுகுறித்து சூலூர் போலீசார் கூறியதாவது:-

சிறுமி பாலியல் பலாத்காரம் ஏதும் செய்யப்படவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்து உள்ளது. தனசேகரிடம் நடத்திய விசாரணையில் தனசேகர் மற்றும் ராஜேஷ் இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் பிரச்சினை இருந்து உள்ளது. அதன்காரணமாக எரித்து கொன்றதாகவும், அதே நேரத்தில் ராஜேஷ் தனது குடும்பம் குறித்து அவதூறாக பேசி வந்ததால் சிறுமியை கொலை செய்ததாகவும் மாற்றி, மாற்றி கூறுகிறார். தற்போது அவர் 60 சதவீத தீக்காயங்களுடன் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறினர்.

மேலும் செய்திகள்