மருத்துவ படிப்புக்கு சென்டாக் 2 வது கட்ட கலந்தாய்வு

மருத்துவ படிப்புக்கு சென்டாக் 2-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள 25-ந்தேதிக்குள் பதிவு கட்டணம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-02-18 18:48 GMT
மருத்துவ படிப்புக்கு சென்டாக் 2-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள 25-ந்தேதிக்குள் பதிவு கட்டணம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2-ம்கட்ட கலந்தாய்வு
சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ர கவுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ். ஆகிய மருத்துவ இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. 
முதல் கட்ட கலந்தாய்வு முடிவடைந்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அந்த மாணவர்கள் உடனே சேர வேண்டும் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் காலியாக உள்ள இடங்களுக்கு 2-வது கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
பதிவு கட்டண விவரம்
இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் கலந்தாய்வு பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். அரசு கல்லூரியில் பொது பிரிவுக்கு ரூ.10 ஆயிரம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி. எஸ்.டி. உள்ளிட்ட மற்ற பிரிவினருக்கு ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும்.
நிர்வாக ஒதுக்கீட்டிற்கு பொதுப்பிரிவிற்கு ரூ.1 லட்சமும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.50 ஆயிரமும் கட்டணம் செலுத்த வேண்டும். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பிரிவிற்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும். 2-வது கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புவோர் கட்டணம் செலுத்திய பின் சென்டாக் டேஸ் போர்டு வழியாக சென்று வருகிற 25-ந் தேதி மதியம் 3 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்கள் சென்டாக் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்