தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தின் பல மாவட்டங்களில், கீழடுக்கு சுழற்சியினால் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-02-17 23:02 GMT


சென்னை,


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், கேரளா மற்றும் அதனையொட்டிய பகுதியில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தென் கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.

சென்னையில் காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். நாளை மற்றும் நாளை மறுநாளில், தென் மாவட்டங்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.

வரும் 21ந்தேதி கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.  நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறையில், 6 செ.மீ. மழை பெய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்