ஹைட்ரோகார்பன் திட்ட பாதிப்புகள் குறித்து அரசிடம் இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது நிபுணர் குழு...!

ஹைட்ரோகார்பன் திட்ட பாதிப்புகள் குறித்து தமிழக அரசிடம் நிபுணர் குழு இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது.

Update: 2022-02-17 03:50 GMT
சென்னை,

காவிரி டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு செயல்படுத்த உள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர். 

இதற்கிடையில் ஹைட்ரோ கார்பன் திட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய புதிய நிபுணர் குழுவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்ட பாதிப்புகள் குறித்து இந்த நிபுணர் குழு ஆராய்ந்து வந்தது.

இந்நிலையில் ஹைட்ரோகார்பன் திட்ட பாதிப்புகள் குறித்து தமிழக அரசிடம் நிபுணர் குழு இன்று அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டத்தால் அப்பகுதிகளில் நிலம் மற்றும் நீர்வளம் மாசடைந்துள்ளது என்றும் கழிவுகள் முறையாக கையாளப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்