பள்ளி-கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் - போலீசார் விசாரணை

பொன்னேரி பேருந்து நிலையத்தில் பள்ளிக் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-02-17 01:46 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்ப்பட்டுள்ளது.  இதில் ஒரு தரப்பு மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் சிலரை அழைத்து வந்து மற்றொரு பள்ளி மாணவர்களை தாக்கி உள்ளனர்.

இருதரப்பினரும் மோதிக் கொண்ட போது கற்களை வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் அந்த பகுதயில் பூ வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த பெண்ணை மீட்ட அங்கிருந்தவர்கள் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுமதித்தனர். 

இந்த மோதல் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விசாரணை நடத்தினர். 

மேலும் செய்திகள்