கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம்

வீட்டு வாடகைப்படி, பஞ்சப்படி உயர்வு கேட்டு புதுவையில் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-16 16:46 GMT
வீட்டு வாடகைப்படி, பஞ்சப்படி உயர்வு கேட்டு புதுவையில் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள்
ஊதிய தினத்தன்று சம்பளம் வழங்கவேண்டும், 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி வீட்டுவாடகைப்படி, பஞ்சப்படி, நிலுவைத்தொகை, ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை 62-லிருந்து 65 ஆக உயர்த்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை புதுவை சொசைட்டி கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கூட்டம், கருப்பு பட்டை அணிந்து வகுப்புகளை நடத்துதல் உள்ளிட்ட போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
போராட்டம்
 அதன்படி அவர்கள் இன்று கல்லூரிகள் முன்பு வாயிற்கூட்டங்களை நடத்தி தங்களது போராட்டங்களை தொடங்கினர்.  இந்த போராட்டத்துக்கு சங்க தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். அவர்கள் வருகிற 19-ந்தேதி வரை கருப்புபட்டை அணிந்து வகுப்புகளை நடத்தவும், 24-ந்தேதி லாஸ்பேட்டையில் உள்ள உயர்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிடவும், 25-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்

மேலும் செய்திகள்