“ரூ.2084 கோடி கோவில் நிலங்கள் மீட்பு” - திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தகவல் - வீடியோ

தமிழகம் முழுவதும் ரூ.2,084 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-16 04:05 GMT
செங்கல்பட்டு,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்ற எம்.பி.யுமான டி.ஆர்.பாலு பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் ரூ.2,084 கோடி மதிப்பிலான கோவில் நிலங்களை 980 பேர் அபகரித்து வைத்திருந்ததாகவும், அவர்களிடம் இருந்து அந்த நிலங்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் 900 கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு புனரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும் செய்திகள்