காவலர் எழுத்து தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் ஆலோசனை

போலீஸ் பணிக்கு உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு எழுத்து தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.

Update: 2022-02-15 13:08 GMT
புதுச்சேரி
போலீஸ் பணிக்கு உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு எழுத்து தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.

உடல்தகுதி தேர்வு

புதுவை காவல்துறையில் காலியாக உள்ள 390 காவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது உடல் தகுதி தேர்வு நடந்து முடிந்துள்ளது. அதைத்தொடர்ந்து உடல் தகுதி தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. 
இந்தநிலையில் காரைக்கால் பகுதியில் எழுத்து தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு கலெக்டர் ஏற்பாட்டின்பேரில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

சிறப்பு பயிற்சி

இதேபோல் அனைத்து பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்  தனது அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் கல்வித்துறை செயலாளர் சுந்தரேசன், போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆனந்த்மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது காவல்துறை மூலம் சிறப்பு ஆசிரியர்களை கொண்டு எழுத்து தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்