காவிரி ஆணையம் அமைக்க திமுக கடுமையாக போராடியது; முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தஞ்சையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
சென்னை,
தஞ்சை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் இருந்தபடி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:
தஞ்சையில் நடைபெற அரசு விழாவில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றேன். 23 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு பல்வேறு மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. ரூ. 1366- கோடிக்கு பயிர் காப்பீடு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
காவிரி மண்ணுக்கும் வேளாண் பெருங்குடி மக்களுக்கும் என்றும் துணையாக இருப்பேன். காவிரி ஆணையம் அமைக்க திமுக கடுமையாக போராடியது. காவிரி நடுவர் மன்றம் அமைக்க முதலில் குரல் கொடுத்தவர் கருணாநிதி; காவிரி இறுதி தீர்ப்பை பெற்று தந்தவரும் கருணாநிதி தான்” என்றார்.