தமிழகத்தில் 75 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்பு - தமிழக அரசு தகவல்

தமிழகம் முழுவதும் 75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2022-02-15 06:20 GMT
சென்னை,

பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்தவர்கள், வேலைவாய்ப்புக்காக தங்கள் கல்வி தொடர்பான விவரங்களை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்கின்றனர். அவ்வாறு 2022 ஜனவரி 31 ஆம் தேதி வரை, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்போர் குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

அதன்படி ஆண்கள் 35 லட்சத்து 56 ஆயிரத்து 85 பேர், பெண்கள் 40 லட்சத்து 32 ஆயிரத்து 46 பேர், மூன்றாம் பாலினத்தவர் 228 பேர் என மொத்தம் 75 லட்சத்து 88 ஆயிரத்து 359 பேர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 17.81 லட்சம் பேர், 19 முதல் 23 வயது வரை 16.14 லட்சம் பேர், 24 முதல் 35 வயது வரை 28.60 லட்சம் பேர், 36 முதல் 57 வயது வரை 13.20 லட்சம் பேர் உள்ளனர். அதே சமயம் 58 வயது மேற்பட்டவர்கள் 11,386 பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்