தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது

தமிழகத்தில் மேலும் 1,634- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-02-14 14:01 GMT
சென்னை

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு இறங்கு முகம் கண்டு வருகிறது. தொற்று பாதிப்பு வேகமாக குறைந்து வருவது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 1,634- ஆக குறைந்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: -  தமிழகத்தில் மேலும்  1,634- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 37 ஆயிரத்து 896- ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 7,365- பேர் குணம் அடைந்துள்ளனர். கவலை அளிக்கும் விதமாக தொற்று பாதிப்புக்கு மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 95 ஆயிரத்து 750- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் மேலும் 341- பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்