போலீஸ்காரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

விருத்தாசலம் அருகே போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-02-14 08:18 GMT
விருத்தாசலம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் காவல் நிலையத்தில் தலைமை போலீசாராக பணியாற்றி வருகின்றார்.

இந்த நிலையில் ஆறுமுகம் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 6 சவரன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து அறிந்த விருத்தாசலம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

போலீசார் வீட்டிலேயே நகை திருடப்பட்ட சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்