முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் புனித் ராஜ்குமாரின் சகோதரர் சந்திப்பு
புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவராஜ்குமார் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
சென்னை,
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் சகோதரரும், நடிகருமான சிவராஜ்குமார், இன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்-அமைச்சரின் முகாம் அலுவலகத்தில், நடிகர் சிவராஜ்குமார் தனது மனைவி கீதாவுடன் முதல்-அமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார்.
அவர்களோடு உரையாடிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு ஆறுதல் கூறினார். நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாரடைப்பால் காலமானார். கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக அறியப்படும் அவர், அறக்கட்டளை மூலமாக பல்வேறு நல உதவிகளை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.