கண்டனம் தெரிவித்த முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் - பதில் அளித்த மே. வங்க கவர்னர்..!

மேற்கு வங்க முதல்வர் அலுவலகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே, சட்டப்பேரவை கூட்டத் தொடரை முடித்து வைத்து உத்தரவிடப்பட்டது என கவர்னர் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.

Update: 2022-02-13 10:45 GMT
கொல்கத்தா, 

மேற்கு வங்காள அரசுக்கும் ,கவர்னருக்கு மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ,மேற்கு வங்காளத்தில் சட்டசபை கூட்டத்தொடரை ஒத்திவைப்பதாக  நேற்று அம்மாநில கவர்னர்  ஜெகதீப் தன்கார் அறிவித்தார். சமூக வலைத்தளங்களில் பேரும் பேசுபொருளாக இவ்விவகாரம் மாறியது. 

இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக இன்று தனது  டுவிட்டரில் பதிவிட்டுள்ள முதல் அமைச்சர் மு.க  ஸ்டாலின், “மேற்கு வங்காள  கவர்னரின் செயல் ,விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு  எதிரானது .ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில் தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது .அரசியலமைப்பு சட்டத்தை நிலைநிறுத்த மாநில தலைமையில் இருப்பவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும்” என்று பதிவிட்டு இருந்தார். 

முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் வகையில், அவரை டுவிட்டரில் டேக் செய்து மேற்கு வங்காள  கவர்னர் ஜெகதீப் தன்கர்   இன்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது;

மேற்கு வங்க முதல்வர் அலுவலகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே, சட்டப்பேரவை கூட்டத் தொடரை முடித்து வைத்து உத்தரவிடப்பட்டது. தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு இதை கொண்டு வர விரும்புகிறேன். 

கடந்த நவம்பர் 17ஆம் தேதி நிறைவடைந்த பேரவைக் கூட்டத் தொடரை முடித்து வைக்க இம்மாதம் 11ஆம் தேதி மேற்கு வங்க அரசு கோரிக்கை விடுத்ததாகவும் அதன்படி 12-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்