பள்ளிவாசல் கதவை உடைத்து ரூ.35 ஆயிரம் கொள்ளை - போலீசார் விசாரணை

தென்கலம் அருகே பள்ளிவாசல் கதவை உடைத்து ரூ.35 ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-02-13 05:16 GMT
கோப்புப்படம்
நெல்லை

நெல்லை மாவட்டம் தென்கலம் பகுதியில் நாகூர் மீரான் ஜும்மா பள்ளிவாசல் உள்ளது. நேற்று தொழுகைகள் முடித்ததும் பள்ளிவாசலை மூடிவிட்டுச் சென்று உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்தவர்கள் பள்ளிவாசல் கதவு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

பின்னர் பள்ளிவாசல் நிர்வாகிகள் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து உள்ளே இருந்த ரூ. 35 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் மானூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்