பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட்டின் 25 மணிநேர கவுண்ட்டவுன் தொடங்கியது
ஸ்ரீஹரிகோட்டாவில் நாளை விண்ணில் ஏவப்படும் பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட்டின் 25 மணிநேர கவுண்ட்டவுன் தொடங்கியது.
சென்னை,
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 5:59 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
இந்த ராக்கெட்டில், 1,710 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.-04 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள், ஒரு மாணவரின் செயற்கைகோள் உள்ளிட்ட 3 செயற்கைகோள்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட்டின் இறுதி கட்டப்பணியான கவுண்ட்டவுன் 25 மணிநேரம் 30 நிமிடமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கவுண்ட்டவுன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 4.29 மணிக்கு தொடங்கியது. இதைத்தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 5.59 மணிக்கு ராக்கெட் விண்வெளிக்கு ஏவப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.