மதுரையில் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம்...
மதுரையில் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
மதுரை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிடுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் பிரசாரம் களை கட்டி உள்ளது.
இந்த நிலையில் மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து மதுரை கே.புதூரில் எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று(வெள்ளிக்கிழமை) தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதற்காக அவர் சேலத்தில் இருந்து மதுரைக்கு கார் மூலம் வருகிறார். மதுரையில் தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு திண்டுக்கல்லுக்கு புறப்பட்டு செல்கிறார்.