தந்தை திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தை திட்டியதால் கல்லூரி மாணவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்
ஸ்ரீவில்லிபுத்தூர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கண்ணன் காலனியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகள் சந்தானலட்சுமி கல்லூரியில் படித்து வருகிறார்.
சந்தானலெட்சுமி வீட்டில் எந்த நேரமும் செல்போனை பார்த்து கொண்ட இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சம்வபத்து அன்று செல்போனில் முழ்கி கிடந்த சந்தானலட்சுமியை தந்தை மாடசாமி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர்,
பொன்னாங்கண்ணி கண்மாய் அருகே உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர அங்குள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்துவந்தனர்.
அங்கு உள்ள கிணற்றுக்குள் பிணமாக கிடந்த அவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள், பிரேத பரிசோதனைக்காக அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குக்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.