"திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயார்" - பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டதாகவும் கூறினார்.

Update: 2022-02-09 14:08 GMT
சென்னை,

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டதாகவும் கூறினார்.  ஆவடி மாநகராட்சி உள்ளிட்ட பகுதியில் அதிமுக சார்பில்  போட்டியிடும்  வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார். 

அப்போது பேசியவர்,அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்திய திட்டங்களையும், திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்குமாறு அதிமுகவினரை  கேட்டுக்கொண்டார். சட்ட மன்ற தேர்தலில் நழுவ விட்ட வாய்ப்பை நகர்ப்புற தேர்தலில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் அப்போது அவர் வலியுறுத்தினார்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டதாகவும் கூறினார்.

மேலும் செய்திகள்