சுகாதார ஆய்வாளர் மீது லாரி மோதி பலி
பணிமுடித்து வீடு திரும்பும் போது சுகாதார ஆய்வாளர் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்
திருவண்ணாமலை,
போளூர் காதர்பாட்சா தெருவில் வசித்துவரும் விஜயா, இவர் வடமாதிமங்கலம்அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஜெயசூர்யா (23) ஆரணியில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று பணி முடித்து மோட்டார் சைக்கிள் போளூர் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்.
பாக்மார்க் பேட்டை என்ற இடத்தில் வந்தபோது எதிர் திசையில் வந்த மினி லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயசூர்யா சம்பவ இடத்தில் உயிரிழந்தார். போலீசார் ஜெயசூர்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்க்காமல் சென்ற லாரி ஓட்டுனரை போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.