நிலப்பிரச்சினையால் விரக்தி: தோட்டத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

நிலப்பிரச்சினையால் விரக்தி அடைந்த விவசாயி தனது தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-08 19:46 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கைலாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சதுரகிரி (வயது 59). இவர் அப்பகுதியில் உள்ள தன்னுடைய 1½ ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.

சதுரகிரி நிலத்தை சுற்றி உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தை ஒரு தனியார் நிறுவனத்தினர் பட்டாசு ஆலை கட்டுவதற்காக வாங்கி உள்ளனர். இந்த நிலத்தை சுற்றி ஆலை நிர்வாகத்தினர் தங்களது நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதில் தனது நிலத்தை தனியார் நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பு செய்ததாக சதுரகிரி கருதினார்.

விஷம் குடித்து சாவு

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாசார்பட்டி போலீஸ் நிலையத்தில் சதுரகிரி தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் நிலத்தை சர்வேயர் மூலம் அளந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தன்னுடைய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து இருப்பார்கள் என்று நினைத்த சதுரகிரி நேற்று காலையில் தன்னுடைய தோட்டத்திற்கு சென்றார். நிலப்பிரச்சினையில் விரக்தியில் இருந்த அவர் அங்கு வைத்து திடீரென பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

மேலும் செய்திகள்