நீட் தேர்வை ரத்துசெய்ய அதிமுக பல முயற்சிகளை செய்துள்ளது: விஜயபாஸ்கர்
அரசு பள்ளி மாணவர்கள் நலனுக்காக 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அதிமுக அரசு செயல்படுத்தியது என்று கூறினார்.
சென்னை,
நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
இந்த சிறப்பு சட்டபேரவை கூட்டத்தின்போது அதிமுக எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர் கூறும்போது, "அரசு பள்ளி மாணவர்கள் நலனுக்காக 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அதிமுக அரசு செயல்படுத்தியது. நீட் தேர்வை ரத்துசெய்ய அதிமுக பல முயற்சிகளை மேற்கொண்டது. மேலும் 2005-ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வு வேண்டாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான்.
நீட்டை எதிர்ப்பதில் எப்போதும் அதிமுக உறுதியாக உள்ளது. பின்தங்கிய மாணவர்களின் நலனுக்காக நாம் இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை இரண்டாவது முறையாக நிறைவேற்றி உள்ளோம்" என்று விஜயபாஸ்கர் கூறினார்.