சுவரில் துளையிட்டு வங்கியில் கொள்ளை முயற்சி
கூட்டுறவு வங்கி சுவரில் பெரிய துளையிட்டு கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். லாக்கர் அறையை திறக்க முடியாததால் ரூ.4 கோடி நகைகள் தப்பின.
அருப்புக்கோட்டை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வாழ்வாங்கி என்ற கிராமம் உள்ளது. இந்த ஊரில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையோரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது.
இந்த வங்கியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான நகைகள் இந்த வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு மேலாளர் உள்ளிட்ட 4 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
நகை - பணம் தப்பின
இந்தநிலையில் நேற்று காலை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்திருந்தனர். வங்கியை திறந்து பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
வங்கியின் பக்கவாட்டு சுவரில் பெரிய அளவில் துளையிடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுகுறித்து பந்தல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
வங்கி சுவரில் துளையிட்டு கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அதே நேரத்தில் லாக்கர் இருக்கும் அறையை திறக்க முடியாததால் ரூ.4 கோடி தங்க நகைகள் அதிர்ஷ்டவசமாக தப்பின. பணமும் கொள்ளையர்களிடம் சிக்கவில்லை.
தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். வங்கி சுவரில் ஆள் உள்ளே சென்று வரும் அளவில் துளையிட்டு, கொள்ளையடிக்க முயன்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.