சிவசங்கர் பாபா சிகிச்சை வழக்கு: சிபிசிஐடி, புழல் சிறைத்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

சிவசங்கர் பாபாவின் சிகிச்சை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி மற்றும் புழல் சிறை அதிகாரிகள் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-02-07 10:21 GMT
சென்னை,

கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அப்பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லியில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து,சிவசங்கர் பாபா மீது இதுவரை 7 போக்சோ வழக்குகள், ஒரு பெண் வன்கொடுமை வழக்கு என மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து,சிவசங்கர் பாபாவின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை தரக் கோரியும்,சொந்த செலவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கோரியும் சிவசங்கர் பாபாவின் சகோதரி ஜெயலட்சுமி சென்னை ஐகோர்ட்டில்  மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில்,இன்று இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, சிவசங்கர் பாபாவின் சிகிச்சை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி மற்றும் புழல் சிறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை பிப்.11 ஆம் தேதிக்கு ஐகோர்ட்டு ஒத்தி வைத்துள்ளது.

மேலும் செய்திகள்