கல்லூரி மாணவியிடம் ஆபாச வீடியோ காட்டி அத்துமீறிய பிரபல டாக்டர்
2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாணவி அவரது தம்பி, தங்கையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது டாக்டர் மோகன்குமார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார்.
காரைக்குடி,
காரைக்குடி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி திண்டுக்கல்லில் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவரது தந்தை சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்த மாணவி இதற்கு முன் புதுக்கோட்டையில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.
அப்போது காரைக்குடியில் அம்மா, தம்பி. தங்கையுடன் வசித்து வந்தார். இவரது தாயார் காரைக்குடியில் துணிக்கடை வைத்துள்ளார்.
வீட்டில் அவரது தாயாருக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது அருகில் மருத்துவமனை நடத்தி வந்த டாக்டர் மோகன் குமார் என்பவரிடம் சிகிச்சை அளித்துள்ளனர்.மாணவியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததை காரணம் சொல்லி டாக்டர் மோகன்குமார் அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார்.
அதன்பின் கொரோனா காலம் என்பதால் மாணவி வீட்டிலேயே ஆன்லைனில் படித்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த டாக்டர், சொல்லித் தருகிறேன் என கூறி அருகில் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு, யூ டியூப்பில் ஆபாச வீடியோவை காண்பித்து தொடர்ந்து டார்ச்சர் செய்துள்ளார்.
2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாணவி அவரது தம்பி, தங்கையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது டாக்டர் மோகன்குமார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என மாணவி காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார்.
காரைக்குடி டி.எஸ்.பி காரைக்குடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயமணி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து எலும்பு முறிவு சிறப்பு டாக்டரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.