சென்னையில் விவேகானந்தர் நவராத்திரி திருவிழா கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்
சென்னையில் விவேகானந்தர் நவராத்திரி திருவிழாவை, கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.
சென்னை,
உலக புகழ் பெற்ற சிகாகோ சொற்பொழிவுக்கு பிறகு சுவாமி விவேகானந்தர் இந்தியா திரும்பினார். பின்னர் சென்னை வந்த விவேகானந்தருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐஸ் அவுஸ் பகுதியில் இருந்து திருவல்லிக்கேணியில் தற்போதுள்ள விவேகானந்தர் இல்லம் வரை அவர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
விவேகானந்தர் இல்லத்தில் 1897-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி முதல் 14-ந்தேதி சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்தார். விவேகானந்தர் தங்கிய இந்த நாட்களை ‘விவேகானந்தர் நவராத்திரி’ என ஸ்ரீராமகிருஷ்ண மடம் சார்பில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் விவேகானந்தர் நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழாவையொட்டி, திருவல்லிக்கேணியில் உள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று வருகை தந்தார். அங்கு ஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீசாரதி தேவி ஆகியோரின் உருவப்படங்கள் மற்றும் சுவாமி விவேகானந்தர் உருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவர் கவுதமானந்தர், தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டி, பாரதிய வித்யா பவன் இயக்குனர் கே.என்.ராமசாமி, நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கவர்னர் தொடங்கி வைத்தார்
அதன்பின்னர் மாலை 4 மணிக்கு ‘விவேகானந்தர் நவராத்திரி’ திருவிழா தொடங்கியது. இந்த விழாவை காணொலி காட்சி வழியாக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக காலையில் நடந்த பூஜை நிகழ்வுகளிலும், மாலை நடந்த விழாவிலும் பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. எனவே காணொலி வழியாகவே நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
ஸ்ரீராமகிருஷ்ணா மடம் மற்றும் மிஷன் தலைமையகம், கொல்கத்தாவில் 1897-ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு, தற்போது 125 ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட தகவல் ஸ்ரீராமகிருஷ்ணா மடம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.