கவர்னரை திருப்திபடுத்தவே அதிமுக பங்கேற்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
கவர்னரை திருப்திபடுத்தவே அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை மாம்பலத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக்கூட்டத்தை அதிமுக புறக்கணித்தது கவர்னரை ஆதரிக்கும் போக்காகவே பார்க்க முடிகிறது.
சமூக அக்கறை உள்ளோரை ஒன்றிணைக்கவே சமூக நீதி கூட்டமைப்பை முதல்-அமைச்சர் அறிவித்தார்.
சமூக நீதி கூட்டமைப்பிற்கு தன்னை தலைவர் என முதல்-அமைச்சர் கூறவில்லை என்பதை அதிமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும்.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்று கருத்து கூறாதது ஏன்? நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதுதான் எங்களின் முழு நோக்கம்.
உள்ளாட்சி தேர்தலில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தருவதே மக்களுக்கு எங்கள் வாக்குறுதி என்றார்.