நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்று முதல் பிரசாரம் செய்கிறார் அண்ணாமலை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை இன்று முதல் பிரசாரம் செய்ய உள்ளார்.

Update: 2022-02-05 21:41 GMT
சென்னை, 

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து களமிறங்குகிறது. 

இந்தநிலையில் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் கே.அண்ணாமலை தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அதன்படி 6-ந்தேதி (இன்று) முதல் 9-ந்தேதி வரை அவர் பிரசாரம் செய்கிறார். கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு வேட்பாளர் அறிமுக கூட்டம், பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார்.

அதன் விவரம்:--

6-ந்தேதி - சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் - பிரசாரம்.

7-ந்தேதி - கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாநகராட்சி.

8-ந்தேதி - நாகர்கோவில், திருச்செந்தூர், தூத்துக்குடி, நெல்லை.

9-ந்தேதி - மதுரை மாநகராட்சி மற்றும் கோவில்பட்டி, சிவகாசி, விருதுநகர் நகராட்சி.

மேற்கண்ட தகவல் பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்