காரைக்காலில் ஓட்டல், மளிகை கடைகளில் திடீர் ஆய்வு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி
காரைக்காலில் ஓட்டல், மளிகை கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
காரைக்கால்
காரைக்காலில் ஓட்டல், மளிகை கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
காலாவதியான பொருட்கள்
காரைக்கால் பகுதியில் உள்ள கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனையில் ஈடுபட்டனர்.
அதன்படி காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி, நேருநகர் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் காலாவதியான உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுபோன்று காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
காரைக்காலை அடுத்த திரு-பட்டினம், திருநள்ளாறு, விழிதியூர், அம்பகரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டல், மளிகை, டீ கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு சில ஓட்டல் மற்றும் சிறு கடைகளில் சமையல் எண்ணெய் மறுசுழற்சி முறையில் உபயோகப்படுத்துவதும், பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதும் கண்டுபிடிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
திரு-பட்டினத்தில் புகையிலை பொருட்கள் விற்ற ஒரிசாவை சேர்ந்த இளைஞர்கள் மீதும், அகலங்கண்ணு மற்றும் விழிதியூர் பகுதிகளில் கலப்பட டீத்தூள் உபயோகித்த டீக்கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் செய்யப்பட்டது.