"அதிமுகவை எதிர்காலத்தில் மக்கள் புறக்கணிப்பர்" மா.சுப்பிரமணியன்
நீட் மசோதா குறித்த கூட்டத்தை புறக்கணித்த அதிமுக, பாஜகவை மக்கள் புறக்கணிப்பார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் இதுவரை 9.60 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி 100% என்ற இலக்கை நெருங்கி வருகிறது. நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் 13,636 பேர் விபத்தில் சிக்கியவர்களுக்கு ரூ 12.94 கோடி செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விபத்தில் ஏற்படும் மரணங்கள் சரி பாதியாக குறைந்துள்ளது.
நீட் மசோதா குறித்த கூட்டத்தை புறக்கணித்த அதிமுக, பாஜகவை எதிர்காலத்தில் மக்கள் புறக்கணிப்பர் என்றார்.
அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணித்தது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.