வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை - 2 பேர் கைது
வடக்கு ரத வீதி அருகே வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்
திண்டுக்கல்
வடக்கு ரதவீதி முத்தழகுபட்டியைச் சேர்ந்தவர் அருள் விசுவாசம் என்பவரை அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கி ஸ்டிபன், ஜெபஸ்டியன் ஆகிய இருவரும் சேர்ந்து தலையில் கல்லை போட்டு கொலை செய்து உள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக இருவரையும் போலீசார் தேடிவந்த நிலையில், வடக்கு ரதவீதி போலீசார் இவர்களை கைது செய்து உள்ளனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் தீவர விசாரணை நடத்தி வருகின்றனர்.