கொடுத்த தொகைக்கு மூன்று மடங்கு பணம் தருவதாக மோசடி செய்த 8 பேர் கைது

சிவகாசியை சேர்ந்த இரண்டு பேரிடம் தான் செலுத்தும் தொகைக்கு மூன்று மடங்கு தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-05 04:28 GMT
விருதுநகர்

திருச்சியில் தனியார் வணிக நிறுவனம் ஒன்றை சாந்தி, சூர்யா, பாபு, அறிவுமணி, பால்ராஜ் ,சாகுல் அமீது ,இளங்கோ ஆகிய 8 பேரும் நடத்தி வருகின்றனர்.  இவர்களுக்கு சிவகாசியை சேர்ந்த மாணிக்கவாசகம் மற்றும் ஜெயலட்சுமி ஆகியோரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர்களிடம் தாங்கள் 10 லட்சம் செலுத்தினால் 30 லட்சமாக திருப்பித் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி உள்ளனர். இதை நம்பி மாணிக்கவாசகமும் ஜெயலட்சுமியும் கடந்த 28. 6 2019 முதல் 30 12 2020 வரை சுமார் 1 கோடியே 93 லட்சத்து 48 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் அந்நிறுவனத்தில் உள்ளோர் சொன்னப்படி பணம் தராதலால் தான் செலுத்திய பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனர். அதற்க்கு அவர்கள் கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிவிட்டது.
இதுகுறித்து திரும்பவும் அந்நிறுவனத்திடம் தொடர்புக் கொண்டபோது மாணிக்கவாசகம் மற்றும் ஜெயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணிக்கவாசகம்  மற்றும் ஜெயலட்சுமி விருதுநகர் மாவட்டம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் 8 பேர் மீதும் மோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



மேலும் செய்திகள்