தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் பார்களை 6 மாதத்தில் மூடவேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
பார்களை நடத்த டாஸ்மாக் நிறுவனத்துக்கு அதிகாரமே கிடையாது. எனவே, மதுவிலக்கு சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவரவில்லை என்றால், தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான பார்களை 6 மாதத்திற்குள் மூடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான பார்களை குத்தகை விடுவது சம்பந்தமாக கடந்த டிசம்பர் 14-ந்தேதி டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து ஆவடியில் டாஸ்மாக் மதுபான பாரை குத்தகைக்கு எடுத்து இருந்த ஜெகநாதன் மற்றும் ஏராளமானோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்தனர்.
அதில், ‘‘2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பார் குத்தகைக்கு எடுத்தோம். கொரோனா ஊரடங்கு காலத்தில் பல மாதங்கள் பார்களை திறக்கவில்லை. அதனால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பார் கட்டிட உரிமையாளருக்கு வாடகை பாக்கி உள்ளது. அதனால், 2019-ம் ஆண்டு எங்களுக்கு வழங்கப்பட்ட குத்தகை உரிமத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க டாஸ்மாக் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும். டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.
இழப்பீடு கேட்க முடியாது
இந்த வழக்கை நீதிபதி சி.சரவணன் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா ஊரடங்கினால் தங்களுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே வழங்கப்பட்ட குத்தகையை நீட்டிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் இதுபோல கோரிக்கை விடுக்க முடியாது. ஏனென்றால், டெண்டர் ஒப்பந்தத்தில் பார் மூடப்பட்டாலோ, வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டாலோ புதிய டெண்டர் அறிவிப்பு வெளியிடப்படும். இதற்காக தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை பார் குத்தகைதாரர் கேட்க முடியாது என்று நிபந்தனை உள்ளது. அதுமட்டுமல்ல, மதுபானம் தொடர்பாக அரசு ஏதேனும் கொள்கை முடிவு எடுத்து, மதுபான பார்களை மூடினால் ஒப்பந்ததாரர்கள் இழப்பீடு எதுவும் கோர முடியாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
சமூக பழக்கம்
தமிழ்நாடு வெளிப்படையான டெண்டர் சட்டத்தின்படி மனுதாரர்கள் அரசிடம் முறையிட்டு நிவாரணம் பெற வழி உள்ளது. எனவே அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மது விற்பனை என்பது பிரதான வருமானமாக அரசுக்கு உள்ளது. மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்று ஒரு காலத்தில் கூறப்பட்டாலும், தற்போது மது அருந்துவது சமூக பழக்கமாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளதால், மது அருந்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்று கர்நாடகா ஐகோர்ட்டு ஒரு வழக்கில் கூறியுள்ளது.
அதிகாரம் இல்லை
டாஸ்மாக் நிறுவனம் மதுபானங்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்வதற்கு மட்டும்தான் சட்டப்படி அனுமதிக்கப்படுகிறது. பார்களை திறப்பதற்கு டாஸ்மாக் நிறுவனத்துக்கு அதிகாரம் இல்லை. அதாவது, இதுபோல பார்களை ஏலம் விட்டு, பார்களை திறந்து பொது இடத்தில் மக்களை மது அருந்த அனுமதிப்பதற்கு டாஸ்மாக் நிறுவனத்துக்கு அதிகாரம் இல்லை.
பார்களை நடத்துவதற்கு உரிமம் வழங்க மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
பார்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ டாஸ்மாக் நிர்வாகம் நடத்த முடியாது. தமிழ்நாடு மது விலக்கு சட்டம் 1937-ன்படி பொது இடங்களில் மது அருந்துவதை ஊக்கப்படுத்த கூடாது என்று கூறியுள்ளது.
நின்றாலே குற்றம்
மேலும், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின்படி, ஒருவர் தன் வீட்டில் வைத்து மது அருந்தலாம். பொது இடத்தில் அருந்தக்கூடாது. அதுமட்டுமல்ல குடிபோதையில் பொது இடத்தில் நின்றாலே சட்டப்படி குற்றமாகும். ஆனால் தமிழ்நாட்டில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் இந்த சட்டத்துக்கு புறம்பாக பார்கள் நடத்தப்படுகின்றன.
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மது விற்பனையில் ஏகபோக உரிமை கொண்டதாக இருந்தாலும், அதற்காக இதுபோல பார்களை நடத்த அனுமதி வழங்க முடியாது. இதை மீறி, தமிழ்நாட்டில் புற்றீசல் போல் பார்கள் திறக்க தமிழ்நாடு மது சில்லறை விற்பனை (கடை மற்றும் பார்) விதி 2003 வழிவகை செய்கிறது.
தடை விதிக்கப்படுகிறது
இந்த விதியே, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்திற்கு எதிராக உள்ளது. அரசுக்கு வருவாய் வருகிறது என்பதற்காக சட்ட விதிகளுக்கு எதிராக பொதுஇடத்தில் பொதுமக்களை மது அருந்த வைப்பதை நியாயப்படுத்த முடியாது. அதை அனுமதிக்கவும் முடியாது.
எனவே, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வராமல் பார்களுக்கு உரிமம் வழங்க டாஸ்மாக் நிறுவனத்திற்கு அதிகாரம் இல்லை. பார் குத்தகை வழங்க டாஸ்மாக் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.
மூடவேண்டும்
கடந்த டிசம்பர் 14-ந்தேதி அறிவிக்கப்பட்ட டெண்டர் அறிவிப்பை திரும்பப்பெற டாஸ்மாக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவில்லை என்றால், தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான பார்களை 6 மாதத்திற்குள் மூடவேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட குத்தகையையும் திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மனுவை முடித்து வைக்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.