விதிமீறிய கட்டிடங்களுக்கு மின் கட்டணம், வரிகளை 5 மடங்கு அதிகம் வசூலிக்க வேண்டும்
விதிமீறல் கட்டிடங்களுக்கு மின்சாரம் கட்டணம், வரி உள்ளிட்டவைகளை 5 மடங்கு அதிகம் வசூலிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
சென்னை,
சென்னை நெற்குன்றத்தை சேர்ந்தவர் காஞ்சனா (வயது 70). இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘1985-ம் ஆண்டு என் கணவர் நிலம் வாங்கி வீடு கட்டினார். இந்த வீடு கட்ட முறையான திட்ட அனுமதி கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தோம். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் வீட்டை ‘சீல்' வைக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதை, ரத்துசெய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், டி.பாரத சக்கரவர்த்தி ஆகியோர் மனுவை தள்ளுபடி செய்தனர். பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மின்சாரம் கூடாது
கட்டிட விதிமீறலில் ஈடுபட்டவர்கள், அதிலிருந்து விடுபட ஐகோர்ட்டை அணுகும்போது, அவர்களுக்கு உடனே நிவாரணம் வழங்க கூடாது. இடைக்காலமாக வழங்கப்படும் இந்த நிவாரணம்கூட, வழக்கு விசாரணை மேலும் ஒரு சுற்றுக்கு வழிவகுத்து விடும். கட்டிட விதிமீறுபவர்களிடம் நீதிபதிகள் கருணை காட்டக்கூடாது.
மின்சார சேவை என்பது அத்தியாவசியமானது. அந்த சேவையை விதிமீறல் கட்டிடங்களுக்கு வழங்க கூடாது. அந்த சேவை வழங்கினாலும் அதற்கு அதிக கட்டணம் வசூலிக்க வேண்டும். கட்டிடம் அங்கீகரிக்கப்படும் வரை விதிமீறிய கட்டிடங்களுக்கு ‘பிரீமியம் மின் கட்டணம்’ நிர்ணயிக்கப்பட வேண்டும்.
5 மடங்கு அதிகம்
கட்டிட திட்ட அனுமதி வரன்முறை செய்யும் வரை, இதுபோன்ற கட்டிடங்களுக்கு மின் கட்டணம், சொத்து வரி, தண்ணீர் மற்றும் கழிவுநீர் கட்டணம் ஆகியவை சாதாரண கட்டணத்தை விட 5 மடங்கு அதிகம் வசூலிக்க வேண்டும்.
இது போன்ற கடுமையான நடவடிக்கைகள் மூலம் கட்டிட விதிமீறல் ஈடுபடுவோரை தடுக்க முடியும். விதிகளுக்குட்பட்டு கட்டிடங்கள் கட்டும் எண்ணத்தை உருவாக்க முடியும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.