கத்தாரிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தல்
கத்தாரிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் 477 கிராம் தங்கம் கடத்திய நபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு கத்தாரின் தோகாவில் இருந்து வந்த விமானத்தில் உள்ள பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த ஆதில் முகமது ஜான் ரபீக்(28) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், அவரை சோதனை செய்த அதிகாரிகள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர்
அவரிடமிருந்து 20 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள 474 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆதில் முகமது ஜான் ரபீக்கை கைது செய்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.