புதுவையில் கொரோனாவுக்கு 3 முதியவர்கள் பலி

புதுவையில் கொரோனாவுக்கு 3 முதியவர்கள் பலியாகி உள்ளனர்.

Update: 2022-02-04 13:53 GMT
புதுச்சேரி
புதுவையில் கொரோனாவுக்கு 3 முதியவர்கள் பலியாகி உள்ளனர்.

431 பேருக்கு தொற்று

புதுவையில்  இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 686 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 431 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.
அவர்களில் 115 பேர் வீடுகளிலும், 5 ஆயிரத்து 343 பேர் ஆஸ்பத்திரிகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.  இன்று  1,608 பேர் குணமடைந்துள்ளனர்.

3 முதியவர்கள் பலி

இருந்தபோதிலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது வாழைக்குளத்தை சேர்ந்த 79 வயது முதியவர், முத்தியால்பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்த 73 வயது முதியவர், காரைக்காலை சேர்ந்த 72 வயது மூதாட்டி ஆகியோர் பலியாகி உள்ளனர். இதனால் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,946 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் தொற்று பரவல் 16.05 சதவீதமாகவும், குணமடைவது 95.47 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 448 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 626 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 362 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 15 லட்சத்து 40 ஆயிரத்து 256 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
புதுவையில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையிலும் பலி எண்ணிக்கை தொடர்கிறது.

மேலும் செய்திகள்