கொரோனா பாதிப்பு; சென்னையில் பெண் தலைமை காவலா் உயிரிழப்பு

சென்னையில் கொரோனா பாதிப்புக்கு பெண் தலைமை காவலா் உயிரிழந்து உள்ளார்.

Update: 2022-02-03 20:55 GMT



சென்னை,



தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது.  இந்நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்புக்கு பெண் தலைமை காவலா் உயிரிழந்து உள்ளார்.

சென்னை முடிச்சூரின் வரதராஜபுரம் பகுதியில் உள்ள பி.டி.சி. குடியிருப்பில் வசித்து வந்தவா் தனலட்சுமி (வயது 48). இவா், சென்னை மீனம்பாக்கம் போக்குவரத்து காவல் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 25ந்தேதி கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வாா்டில் தங்கி சிகிச்சை பெற்றார்.  ரத்த அழுத்தம் மற்றும் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தனலட்சுமி நேற்று முன்தினம் (புதன்கிழமை) இரவு உயிரிழந்துள்ளார்.

மேலும் செய்திகள்