சென்னையில் த.மா.கா. போட்டியில்லை; ஜி.கே. வாசன் அறிவிப்பு
சென்னை மாநகராட்சி வார்டுகளில் த.மா.கா. போட்டியிடவில்லை என அக்கட்சி தலைவர் கூறியுள்ளார்.
சென்னை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், சென்னை மாநகராட்சி வார்டுகளில் மட்டும் த.மா.கா. போட்டியிடவில்லை.
கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வின் முழு வெற்றிக்கு த.மா.கா. ஆதரவு கொடுக்கிறது. தமிழகம் முழுவதும் போட்டியிடும் அ.தி.மு.க.-த.மா.கா. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார்.